கொரோனா விழிப்புணர்வு ஓவியம்

திண்டுக்கல்லில் போலீசார் கொரோனா விழிப்புணர்வு ஓவியத்தை சாலையில் வரைந்துள்ளனர்.
கொரோனா விழிப்புணர்வு ஓவியம்
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரசின் 2-ம் அலை வேகமாக பரவி வருகிறது. முதல் அலையைவிட 2-ம் அலையில் உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டு வருகிறது.

இதன் காரணமாக தற்போது தளர்வுகள் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் போக்குவரத்து போலீசார் சார்பில் திண்டுக்கல் கல்லறை தோட்டம் அருகே நேற்று கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டது. அந்த ஓவியம் கொரோனா வைரஸ் போன்று வட்டவடிவிலும்,

அதன் மேற்பரப்பில் ஸ்பைக் போன்ற அமைப்புகளும் வரையப்பட்டன. மேலும் கொரோனாவின் கோர தாண்டவத்தை ஒரு அரக்கன் போல் பாவித்து வட்டவடிவத்துக்குள் அரக்கன் இருப்பது போன்றும் வரையப்பட்டுள்ளது.

அத்துடன் ஓவியத்தின் மேல்புறம் தனித்திரு, விழித்திரு, வீட்டில் இரு என்ற விழிப்புணர்வு வாசகங்களும் எழுதப்பட்டுள்ளன.

இதனை பார்க்கும் பொதுமக்கள் கொரோனா அச்சத்தில் தேவையின்றி வெளியே சுற்றுவதை தவிர்ப்பார்கள் என நம்புவதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com