

பெங்களூரு: கர்நாடகத்தில் புதிதாக 832 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
காநாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
8 பேர் உயிரிழந்தனர்
கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 917 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 832 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 லட்சத்து 7 ஆயிரத்து 337 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 8 பேர் உயிரிழந்தனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 335 ஆக உயர்ந்துள்ளது. ஒரேநாளில் 335 பேர் குணம் அடைந்தனர். இதன் மூலம் குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 29 லட்சத்து 60 ஆயிரத்து 261 ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக பெங்களூரு நகரில் 656 பேரும், பெலகாவியில் 12 பேரும், தட்சிண கன்னடாவில் 30 பேரும், ஹாசனில் 11 பேரும், குடகில் 21 பேரும், உடுப்பியில் 35 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு பெங்களூரு நகரில் 5 பேரும், தட்சிண கன்னடா, மண்டியா, உத்தரகன்னடா ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என மொத்தம் 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஒமைக்ரான் வைரஸ்
கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கிவிட்டது. இதனால் கொரோனா 3-வது அலை மாநிலத்தில் தொடங்கிவிட்டதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால் இதுகுறித்து அரசு இன்னும் அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.