

ஊத்துக்கோட்டை,
கொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு விதித்த புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. இது குறித்து வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஊத்துக்கோட்டையில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
கொரோனா தொற்று 2-வது அலை பரவாமல் தடுக்க தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை அனைவரும் மதித்து நடக்க வேண்டும். காய்கறி, மளிகை, டீக்கடைகள் காலை 6 முதல் 12 மணி வரை திறக்க அனுமதிக்கப்படும்.
மற்ற கடைகளை திறக்கக்கூடாது. ஓட்டல்களில் பார்சல் மட்டும் அனுமதிக்கப்படும். இந்த கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன மற்றும் பலர் கலந்து கொண்டனர்.