நாமகிரிப்பேட்டையில் கொரோனாவுக்கு முதியவர் பலி

நாமகிரிப்பேட்டையில் கொரோனாவுக்கு முதியவர் பலியானார்.
நாமகிரிப்பேட்டையில் கொரோனாவுக்கு முதியவர் பலி
Published on

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா முதல் அலையில் 111 பேர் பலியாகி இருந்தனர். தற்போது 2-வது அலை வேகமாக பரவி வந்தாலும் இறப்பு ஏற்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையை சேர்ந்த 66 வயது முதியவர் காய்ச்சல், சளி தொல்லையால் கடந்த சில நாட்களாக அவதிப்பட்டு வந்தார்.

அவருக்கு கடந்த 13-ந் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தும் அவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதனால் நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com