கர்நாடகத்தில் புதிதாக 1,108 பேருக்கு கொரோனா

கர்நாடகத்தில் புதிதாக 1,108 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் புதிதாக 1,108 பேருக்கு கொரோனா
Published on

பெங்களூரு:

கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 6 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 1,108 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29 லட்சத்து 65 ஆயிரத்து 191 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் 18 பேர் உயிரிழந்த நிலையில், இறந்தவர்கள் எண்ணிக்கை 37 ஆயிரத்து 555 ஆக அதிகரித்து உள்ளது. நேற்று 809 பேர் குணம் அடைந்தனர். இதுவரை 29 லட்சத்து 11 ஆயிரத்து 434 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 16 ஆயிரத்து 174 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

பெங்களூரு நகரில் 308 பேர், தட்சிண கன்னடாவில் 186 பேர், உடுப்பியில் 113 பேர், மைசூருவில் 87 பேர் உள்பட 27 மாவட்டங்களில் நேற்று கொரோனா பாதிப்பு பதிவாகி இருந்தது. பெங்களூரு நகரில் 5 பேர், பெலகாவியில் 4 பேர், தட்சிண கன்னடாவில் 2 பேர், சாம்ராஜ்நகர், தாவணகெரே, ஹாசன், குடகு, கோலார், மைசூரு, துமகூருவில் தலா ஒருவர் இறந்தனர். 20 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com