

கோவை
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் புதிதாக 1,696 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 3 லட்சத்து 18 ஆயிரத்து 288 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல, கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த 3,621 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் கோவையில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 94 ஆயிரத்து 88 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனோ தொற்றினால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 82 வயது முதியவர், 77 வயது முதியவர், 58 வயது ஆண் ஆகிய 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் மாவட்டதில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 574 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 21 ஆயிரத்து 626 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.