அரியலூரில் 31 பேருக்கு கொரோனா பெரம்பலூரில் 14 பேர் பாதிப்பு

அரியலூரில் புதிதாக 31 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதேபோல் பெரம்பலூரில் 14 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரியலூரில் 31 பேருக்கு கொரோனா பெரம்பலூரில் 14 பேர் பாதிப்பு
Published on

பெரம்பலூர்,

அரியலூர் நகராட்சி பகுதிகளிலும், அரியலூர், திருமானூர், தா.பழூர் ஆகிய ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளிலும் நேற்று தலா 4 பேருக்கும், செந்துறை ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் 5 பேருக்கும், ஆண்டிமடம் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் 2 பேருக்கும், ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் 6 பேருக்கும், ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஒருவருக்கும், பிற மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும் என மொத்தம் 31 பேர் புதிதாக கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3, 753 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே கொரோனாவிற்கு மாவட்டத்தில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு மருத்துவமனைகளில் தற்போது 736 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தம் 2, 978 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மேலும் 490 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

இதே போல் நேற்று பெரம்பலூர் வட்டாரத்தில் 6 பேரும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 2 பேரும், வேப்பூர், ஆலத்தூர் ஆகிய வட்டாரங்களில் தலா 3 பேரும் என மொத்தம் 14 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1, 838 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் ஏற்கனவே 21 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவமனைகளில் இருந்து இதுவரைக்கும் 1, 697 பேர் டிஸ்சார்ஜ் ஆகிய நிலையில், தற்போது 120 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 437 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com