

அரியலூர்,
பூக்கடை நடத்தி வந்த அரியலூரை சேர்ந்த 43 வயது ஆண் ஒருவர் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவு வருவதற்கு முன்னே, நேற்று முன்தினம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் சென்னையில் இருந்து திரும்பி வந்த செட்டிதிருகோணத்தை சேர்ந்த 20 வயது ஆண், பொய்யூரை சேர்ந்த 20 வயது ஆண் மற்றும் ராயம்புரத்தை சேர்ந்த 53, 45 வயதுடைய 2 ஆண் என மொத்தம் 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 4 பேரும் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அரியலூர் மாவட்டத்தில் 549 பேரின் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.