கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 49 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். காவேரிப்பட்டணத்தில் 6 ஆண்கள், 1 பெண், கிருஷ்ணகிரியில் 6 ஆண்கள், 1 பெண், ஓசூரில் 13 ஆண்கள், 8 பெண்கள், பர்கூரில் 2 ஆண்கள், 1 பெண், ஒப்பதவாடியில் 1 ஆண், 1 பெண், குப்பச்சிப்பாறை, சின்னமேலுப்பள்ளி, அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, வேப்பனப்பள்ளி, மதிகோன்பாளையம் ஆகிய பகுதிகளில் தலா 1 ஆண்களும், கெலமங்கலத்தில் 1 பெண் என நேற்று மொத்தம், 49 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,320 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com