விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 543 பேருக்கு கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை கடந்தது

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 543 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து மாவட்டத்தின் பாதிப்பு எண்ணிக்கை 8,180 ஆக உயர்ந்தது.
விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 543 பேருக்கு கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை கடந்தது
Published on

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 56,361 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 7,637 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. 9,409 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. இதில் 4,331 பேர் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 6 சிறப்பு தனிமைப்படுத்தும் மையங்களில் 143 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 543 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. விருதுநகர் இந்திராநகரில் 37 வயது பெண், 58 வயது பெண், 29 வயது பெண், விருதுநகர் டாஸ்மாக்கில் 23, 28, 32, 33, 56, 30, 54 வயது நபர்கள், விருதுநகரை சேர்ந்த 57, 52, 62, 60, 30, 41 வயது நபர்கள், 37 வயது பெண், பாவாலியை சேர்ந்த 32 வயது நபர், சத்யசாய் நகரை சேர்ந்த 35 வயது பெண் உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிவகாசி

சிவகாசி பராசக்தி காலனியை சேர்ந்த 29 வயது நபர், மீனம்பட்டியை சேர்ந்த 34 வயது பெண், பாட்டக்குளம், இலுப்பையூர், வத்திராயிருப்பு, ராஜபாளையம், அழகியநல்லூர், சோலைக்கவுண்டன்பட்டி, சுந்தரபாண்டியம், அகத்தாப்பட்டி, வ.புதுப்பட்டியை சேர்ந்த 21 பேர், சொக்கநாதன்புதூர், கரிசல்குளம், சேத்தூர், நடுவப்பட்டி, ஆகாசம்பட்டியை சேர்ந்த 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வத்திராயிருப்பு டவுன் பஞ்சாயத்தை சேர்ந்த 26 வயது பெண் ஊழியர் உள்பட 16 பேர், அங்குள்ள அரசுடமை வங்கியில் பணியாற்றும் 6 பேர், கொடிக்குளம் டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் பணியாற்றி வரும் 3 பேர், கூமாப்பட்டி, வாகைக்குளம், லட்சுமிபுரத்தில் 5 பேர், புரசலூரில் 3 பேர், எம்.ரெட்டியப்பட்டியில் 3 பேர், கட்டங்குடி, நாலூர், ஆவுடையாபுரம், காரியாபட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், அரசப்பட்டி, வெற்றிலையூரணி, இலுப்பையூர், அழகியநல்லூர், நாகம்பட்டி, மம்சாபுரம் ஆகிய ஊர்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

8 ஆயிரத்தை கடந்தது

கல்லமநாயக்கன்பட்டியில் 9 பேர், மகாராஜபுரத்தில் 9 பேர், இலந்தைகுளத்தில் 9 பேர், பந்தல்குடியில் 39 பேர், மேட்டுப்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, சேத்தூர், ஆவியூர், கொங்காகுளம், அய்யம்பட்டி, மல்லி, இருக்கன்குடி, பாரைப்பட்டி, பட்டம்புதூரில் 5 பேர், பாலையம்பட்டியில் 6 பேர், மல்லாங்கிணறு, வச்சக்காரப்பட்டி, கடம்பன்குளம், தோணுகால், மேலசுரணைக்குளம், தமிழ்பாடி, ஆண்டுகொண்டான், முத்தார்பட்டியில் 12 பேர், சிவசங்குபட்டியில் 14 பேர், நாச்சியார்பட்டி, தம்பிப்பட்டி, நென்மேனி, முத்துச்சாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,180 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து நகர்புறத்தை விட கிராமங்களிலேயே அதிக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவதில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. தொடர்ந்து தாமதம் ஆகும் நிலையே இருந்து வருகிறது. தாமதத்தை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 5 பேர் பலியாகி உள்ளனர். ஆதலால் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com