கடந்த 7 நாட்களில் சென்னையில் கொரோனா பாதிப்பு 5.5 சதவீதம் குறைந்தது: சென்னை மாநகராட்சி தகவல்

சென்னையில் கடந்த 7 நாட்களில் கொரோனா பாதிப்பு 5.5 சதவீதம் குறைந்து உள்ளதாக மாநகராட்சி தகவல் தெரிவித்து உள்ளது.
கடந்த 7 நாட்களில் சென்னையில் கொரோனா பாதிப்பு 5.5 சதவீதம் குறைந்தது: சென்னை மாநகராட்சி தகவல்
Published on

5.5 சதவீதம் குறைந்தது

சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. அந்தவகையில் கடந்த 7 நாட்களில் மட்டும் சென்னையில் கொரோனா பாதிப்பு 5.5 சதவீதம் குறைந்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி இணையதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-

சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலத்தில் மட்டும் 0.7 சதவீதம் பாதிப்பு அதிகரித்துள்ளது. திரு.வி.க நகர் மண்டலத்தில் பாதிப்பு விகிதம் பூஜ்ஜியமாக உள்ளது. ஆனால், மற்ற 13 மண்டலங்களிலும் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.அந்தவகையில் தண்டையார்பேட்டை மண்டலத்தில் 2.6 சதவீதமும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 2.7 சதவீதமும், அடையாறு மண்டலத்தில் 3.1 சதவீதமும் குறைந்துள்ளது. மணலியில் 4.8 சதவீதமும், வளசரவாக்கத்தில் 5.3 சதவீதமும், மாதவரத்தில் 6.1 சதவீதமும் கொரோனா பாதிப்பு சரிந்துள்ளது.

ஆண்கள் அதிகம்

கோடம்பாக்கத்தில் 6.3 சதவீதம், சோழிங்கநல்லூரில் 6.4 சதவீதம், அம்பத்தூர், ஆலந்தூரில் தலா 7 சதவீதம், திருவொற்றியூரில் 7.2 சதவீதம், அண்ணாநகரில் 8.2 சதவீதமும், அதிகபட்சமாக பெருங்குடி மண்டலத்தில் 10.6 சதவீதமும் பாதிப்பு குறைந்துள்ளது.சென்னையில் இதுவரை 30 முதல் 39 வயதினரே அதிகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அந்தவகையில் 20.68 சதவீதம் பேர் 30 முதல் 39 வயதினரும், 17.38 சதவீதம் பேர் 40 முதல் 49 வயதினரும், குறைந்தபட்சமாக 9 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 2.45 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக ஆண்கள் 52.98

சதவீதமும், பெண்கள் 47.01 சதவீதம் பேரும் அடங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com