கொரோனா நிவாரண நிதியாக ரேஷன்கார்டுதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் எம்.எல்.ஏ. வழங்கினார்

கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
கொரோனா நிவாரண நிதியாக ரேஷன்கார்டுதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் எம்.எல்.ஏ. வழங்கினார்
Published on

மதுராந்தகம்,

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதுராந்தகம் வடக்கு ஒன்றியம், தெற்கு ஒன்றியம், அச்சரப்பாக்கம் வடக்கு ஒன்றியம், தெற்கு ஒன்றியம், கருங்குழி பேரூராட்சி, அச்சரப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பயனாளிகளுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகை முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் ரேஷன்கார்டு தாரர்களுக்கு ரூ.2 ஆயிரத்தை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஒனறிய செயலாளர்கள் அப்பாதுரை, கார்த்திகேயன், சுப்பிரமணியன், விவேகானந்தன், பேரூர் கழக செயலாளர்கள் பழனி, முருகதாஸ், பா.ம.க. மாவட்ட செயலாளர் கோபால் கண்ணன், மதுராந்தகம் தெற்கு ஒன்றிய பா.ம.க. செயலாளர் சிவலிங்கம், அச்சரப்பாக்கம் பேரூர் செயலாளர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com