தோட்ட தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் இருந்து கேரளாவுக்கு வேலைக்கு செல்லும் தோட்ட தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தோட்ட தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை
Published on

தேனி :

தேனி மாவட்டம் கம்பம், காமயகவுண்டன்பட்டி, அணைப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து கேரளாவில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு தொழிலாளர்கள் வேலைக்கு சென்று வருகின்றனர்.

அவர்களுக்கு கொரோனா பரிசோதனை சான்று கட்டாயமாக்கபட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து கம்பம் நகர்ப்புற சுகாதார நிலையத்தில் டாக்டர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் 300 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதேபோல் காமயகவுண்டன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த முகாமில் மருத்துவ அலுவலர் டாக்டர் சுதா தலைமையில் 120 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

முகாமில் சித்த மருத்துவர் சிராஜ்தீன் தொழிலாளர்களிடம், கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com