அனகாபுத்தூர் நகராட்சி கமிஷனருக்கு கொரோனா

அனகாபுத்தூர் நகராட்சி கமிஷனருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
அனகாபுத்தூர் நகராட்சி கமிஷனருக்கு கொரோனா
Published on

தாம்பரம்,

சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் நகராட்சியில் கமிஷனராக இருப்பவர் திருநாவுக்கரசு(வயது 52). இவருக்கு சிறுநீரகத்தில் கற்கள் இருந்தது. இதற்காக அறுவை சிகிச்சை செய்வதற்காக ராமாபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவர், கிண்டியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்

கொரோனா வைரஸ் ஊரடங்கால் 20 நாடுகளில் இருந்து 49 ஆயிரத்து 336 பேர் சிறப்பு விமானங்களில் சென்னை அழைத்து வரப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்கு பிறகு தனிமைப்படுத்தப்பட்டனர். அதில் 842 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில் முகாமில் தங்கி இருந்தவர்களில் கத்தாரில் இருந்து வந்த மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 844 ஆனது.

உள்நாட்டு முனையம்

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்துக்கு பல்வேறு நகரங்களில் இருந்து வந்த 1 லட்சத்து 36 ஆயிரத்து 887 பேர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். அதில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 228 ஆக உயர்ந்தது.

சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலத்தில் நேற்று 50 பேருக்கும், அடையாறு மண்டலத்தில் 69 பேருக்கும், பெருங்குடி மண்டலத்தில் 52 பேருக்கும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 40 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com