கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

கிணத்துக்கடவு, வால்பாறையில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
Published on

கிணத்துக்கடவு,

தமிழக அரசு உத்தரவின்படி பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, கோவில்பாளையம், வடசித்தூர் ஆகிய பகுதிகளில் தடுப்பூசி போடும் பணி விறு விறுப்பாக நடைபெற்றது. கிணத்துக்கடவு தாலுகாவில் நல்லட்டிபாளையம், சொக்கனூர், வடசித்தூர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிணத்துக்கடவு அரசு மருத்துவமனை, மன்றாம்பாளையம், பனப்பட்டி, மெட்டுவாவி, பெரியகளந்தை, கொண்டம்பட்டி, குளத்துப்பாளையம், கப்பளாங்கரை, குருநெல்லிபாளையம், வடசித்தூர் உள்ளிட்ட 15 இடங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் 2,451 பேருக்கு முதல் மற்றும் 2-வது டோஸ் தடுப்பூசி போடப்பட்டது.

முகாம்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அம்சவேணி, தாசில்தார் சசிரேகா ஆகியோர் பார்வையிட்டனர். தடுப்பூசி போடும் பணியில் பணியில் நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சித்ரா தலைமையில் செவிலியர்கள் ஈடுபட்டனர்.

இதேபோன்று வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து எஸ்டேட் ஆஸ்பத்திரிகளிலும், பள்ளிக்கூடங்களிலும், பயணிகள் நிழற்குடை, அட்டகட்டி வனத்துறை சோதனை சாவடி, தமிழக&கேரள எல்லை பகுதியில் உள்ள மளுக்கப்பாறை, சேக்கல்முடி போலீஸ் சோதனை சாவடி உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி போடப்பட்டது.

வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆணையாளர் சுரேஷ்குமார் தலைமையிலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பாபு லட்சுமணன் தலைமையிலும் கொரோனா தடுப்பூசி முகாமுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com