திருவள்ளூரில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு சிறப்பு முகாம்; அமைச்சர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றார்

திருவள்ளூர் பஸ் நிலையத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்புத்துறை சார்பில் பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள், கடை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவள்ளூரில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு சிறப்பு முகாம்; அமைச்சர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றார்
Published on

இந்த நிகழ்ச்சியில் பால்வளத் துறை அமைச்சர் நாசர் தலைமை தாங்கி பஸ் பயணிகள், கடை வியாபாரிகளிடம் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதைத்தொடர்ந்து திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு சிறப்பு முகாமை துவக்கி வைத்து கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை வாசிக்க அரசு அலுவலர்கள், சுகாதார பணியாளர்கள் வாசித்து உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.பின்னர் அவர் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக கை கழுவும் செயல்முறை விளக்கத்தை பொதுமக்களுக்கு செய்து காண்பித்தார்.

இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.ஜி. ராஜேந்திரன், திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி மற்றும் மருத்துவ கல்லூரி முதல்வர் அரசி ஸ்ரிவத்சவ்,

சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜவகர்லால், திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி பூபதி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com