அலட்சியப்படுத்துபவர்களை கொரோனா விடாது: கவர்னர் கிரண்பெடி எச்சரிக்கை

அலட்சியமாக இருப்பவர்களை கொரோனா வைரஸ் விடாது என்று கவர்னர் கிரண்பெடி எச்சரித்துள்ளார்.
அலட்சியப்படுத்துபவர்களை கொரோனா விடாது: கவர்னர் கிரண்பெடி எச்சரிக்கை
Published on

புதுச்சேரி,

சமூக வலைதளத்தில் புதுவை கவர்னர் கிரண்பெடி ஒரு பதிவை வெளியிட்டு ள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கொரோனா ஊரடங்கு காலத்தில் விதிமுறைகள் மீறப்படுவதை அனைத்து வகையான ஊடகங்களும், அதிகாரிகளும் ஆவணப் படுத்த வேண்டும். சிலர் விதிமுறைகளை மீறி நடப்பதை பார்த்து மக்களும் அதை கடைபிடிக்கின்றனர்.

போலீசாரும் இந்த விஷயத்தில் அலட்சியமாக இருக்கிறார்கள். கொரோனா வைரஸ் எல்லா விஷயங்க ளிலும் மிகவும் ஆபத்தானது. அலட்சியமாக இருக்கும் எவரையும் அது விடாது.

இதில் சோகம் என்னவென்றால் அலட்சி யமாக இருப் பவர்களால் அது மற்றவர்களுக்கும் பரவுகிறது. குடும்பங்களில் சுகாதாரமற்ற பழக்கவழக்கங்களால்கூட இது பரவுகிறது.

கூட்டங்களுக்கு வர அழைப்பு விடுக்கும்போது மக்கள் கூடுதல் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஏனெனில் அந்த கூட்டங்கள் மூலமாகவும் வைரஸ் பரவும். மெல்லிய முகக்கவசங்கள் அவர்களை முழுமையாக பாதுகாக்காது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com