கொரோனா வைரஸ் விழிப்புணர்வு; பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது

தமிழக - ஆந்திர எல்லையில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் விழிப்புணர்வு; பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது
Published on

பேரணாம்பட்டு,

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே தமிழக - ஆந்திர எல்லையில் பத்தலப்பல்லி சோதனைச்சாவடி அமைந்துள்ளது. திருப்பத்தூர் சுகாதார பணிகள் துணை இயக்குனர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் நரியம்பட்டு வட்டார மருத்துவ அலுவலர் கலைச்செல்வி தலைமையில் டி.டி. மோட்டூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சிவக்குமார், டாக்டர் ராஜசேகர் மற்றும் ஆரம்ப சுகாதார மருத்துவ பணியாளர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் தமிழக எல்லை வழியாக ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்கு செல்லும் பஸ்கள், கனரக வாகனங்களில் லைசால் கொண்டு கிருமி நாசினி தெளித்தனர். மேலும் கை கழுவுதலின் அவசியம், கொரோனா வைரஸ் குறித்து சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பின்னர் பேரணாம்பட்டு வீ.கோட்டா ரோட்டில் அமைந்துள்ள தமிழக அரசு போக்குவரத்து கழக பணிமனை கிளையில் இருந்து புறப்பட்டு செல்லும் அரசு பஸ்கள் மற்றும் திரும்பி வரும் அரசு பஸ்களுக்கு லைசால் கொண்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

மேலும் கொரோனா வைரஸ் குறித்து போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அவர்களுக்கு கிருமி நாசினி தெளிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com