கொரோனா வைரஸ் தொடர்பான மருத்துவ ஆலோசனைகள் பெற தொலைபேசி எண்கள் - மாவட்ட கலெக்டர் தகவல்

கொரோனா வைரஸ் தொடர்பான மருத்துவ ஆலோசனைகள் பெற தொலைபேசி எண்கள் அறிமுகபடுத்தப்பட்டுள்ளதாக கலெக்டர் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கூறினார்.
கொரோனா வைரஸ் தொடர்பான மருத்துவ ஆலோசனைகள் பெற தொலைபேசி எண்கள் - மாவட்ட கலெக்டர் தகவல்
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் பொருட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தொடர்பான மருத்துவ ஆலோசனைகள் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன் பொருட்டு, தொலைபேசி வாயிலாக மருத்துவ ஆலோசனைகளை வழங்க அரசு முன்வந்துள்ளது. இந்த தொலைதூர ஆலோசனை வழங்குவதற்கு திருவள்ளூர் மாவட்டத்தில் கீழ்க்கண்ட மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜி.கேர் மருத்துவமனை 9566560730, ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை 9444991299, ஸ்ரீ ராமச்சந்திரா மெடிக்கல் சென்டர் 044 45928500, அப்போலோ மருத்துவமனை 044 2829 3333 ஆகிய மருத்துவமனை தொலைப்பேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு கொரோனா வைரஸ் தொடர்பான மருத்துவ ஆலோசனைகளை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம்.

மேற்கண்ட தகவலை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com