தேர்தல் நடைபெறும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள்

தேர்தல் நடைபெறும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள்
தேர்தல் நடைபெறும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள்
Published on

நாகர்கோவில்,

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 19-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. குமரி மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 4 நகராட்சிகள் மற்றும் 51 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. அந்த வகையில் நாகர்கோவில் மாநகராட்சி, குளச்சல், குழித்துறை, கொல்லங்கோடு மற்றும் பத்மநாபபுரம் ஆகிய நகராட்சிகளுக்கு தேர்தல் நடக்கிறது.

மேலும் பேரூராட்சிகளை பொறுத்த வரை அகஸ்தீஸ்வரம், கடையல், களியக்காவிளை, கல்லுக்கூட்டம், கன்னியாகுமரி, கப்பியறை, கருங்கல், கீழ்குளம், கிள்ளியூர், கோதநல்லூர், கொட்டாரம், அழகப்பபுரம், அஞ்சுகிராமம், ஆரல்வாய்மொழி, அருமனை, ஆற்றூர், அழகியபாண்டியபுரம், பூதப்பாண்டி, இடைக்கோடு, இரணியல், கணபதிபுரம், குலசேகரம், குமாரபுரம், மணவாளக்குறிச்சி, மண்டைக்காடு, மருங்கூர், மயிலாடி, முளகுமூடு, நல்லூர், புத்தளம், புதுக்கடை, ரீத்தாபுரம், சுசீந்திரம், தாழக்குடி, தென்தாமரைகுளம், தேரூர், திங்கள்நகர், நெய்யூர், பாகோடு, பாலப்பள்ளம், பளுகல், திற்பரப்பு, பொன்மனை, திருவட்டார், வேர்கிளம்பி, விளாவூர், வில்லுக்குறி, திருவிதாங்கோடு, உண்ணாமலைக்கடை, வாழ்வச்சகோஷ்டம் மற்றும் வெள்ளிமலை ஆகிய 51 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com