மகளிர் கல்லூரியில் மின் விளக்குகள் அமைக்கும் பணி

சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்கு எண்ணும் மையமான திருப்பூர் மகளிர் கல்லூரியில் மின் விளக்குகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
மகளிர் கல்லூரியில் மின் விளக்குகள் அமைக்கும் பணி
Published on

திருப்பூர்

சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்கு எண்ணும் மையமான திருப்பூர் மகளிர் கல்லூரியில் மின் விளக்குகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

வாக்கு எண்ணும் மையம்

திருப்பூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்து கொண்டிருக்கின்றன. திருப்பூர் வடக்கு தெற்கு அவினாசி பல்லடம்தாராபுரம் உடுமலை மடத்துக்குளம் காங்கேயம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவிற்கு பின் வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான திருப்பூர் அரசு மகளிர் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட இருக்கின்றன.

மின் விளக்குகள் அமைக்கும் பணி

இதன் காரணமா வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடுகள் தேர்தல் அதிகாரிகளால் செய்யப்பட்டு வருகின்றன. வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் அறை போன்றவை தயார் செய்யப்படுகிறது. இதற்காக கல்லூரியில் சில வகுப்பறை சுவர்கள் இடித்து அகற்றப்பட்டன. இதுபோல் தற்போது தேர்தல் பணிகள் வேகமெடுத்துள்ளதால் இரவு நேரங்களிலும் அதிகாரிகள் அந்த பகுதிக்கு வந்து சென்று பணிகளை பார்வையிட்டு வருகிறார்கள்.

இதன் காரணமாக தற்போது வாக்கு எண்ணும் மையத்தில் மின்விளக்குகள் அமைக்கும் பணி ஆங்காங்கே தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், இடங்களை சுத்தம் செய்யும் பணியும் நடந்துள்ளது. இதுபோல் கலெக்டர் அலுவலகத்தில்இருந்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எளிதாக வரும் வகையில் அந்த பகுதியில் உள்ள ஒரு சுவரும் இடித்து அகற்றி வழிப்பாதையும் ஏற்படுத்தப்பட்டு, அங்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com