ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் உயிரிழப்புகள் இனப்படுகொலைக்கு நிகரானது: அலகாபாத் உயர் நீதிமன்றம்

ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் உயிரிழப்புகள் இனப்படுகொலைக்கு நிகரானது என அலகாபாத் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் உயிரிழப்புகள் இனப்படுகொலைக்கு நிகரானது: அலகாபாத் உயர் நீதிமன்றம்
Published on

அலகாபாத்,

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் உச்சம் தொட்டுள்ளது. தினசரி பாதிப்புகள் கடந்த சில நாட்கள் முன்னதாக அதிகபட்சமாக 4 லட்சம் வரை பதிவானது. கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பால், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்புகள் ஏற்படுவது கடும் வேதனை அளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் ஆக்ஸிஜன் இன்றி மக்கள் உயிரிழக்கும் சம்பவம் குறித்து தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கில் கருத்து தெரிவித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் 'இந்தியாவில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மக்கள் உயிரிழக்கும் சம்பவம் ஒரு இனப்படுகொலைக்கு நிகரானது என கடுமையாக கூறியது.

மேலும், மருத்துவ வசதிகள் மேம்பட்டுள்ள இந்த காலத்தில் ஒரு மனிதனுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாட்டல் உயிரிழப்பு ஏற்படுவதை எப்படி அனுமதிக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com