சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் கோ பூஜை; தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தார்

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் கோ பூஜையை தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார்.
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் நடந்த கோ பூஜயை தளவாய்சுந்தரம் தாடங்கி வைத்தபோது
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் நடந்த கோ பூஜயை தளவாய்சுந்தரம் தாடங்கி வைத்தபோது
Published on

மாட்டு பொங்கல்

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் கோசாலையில் ஆண்டுதோறும் கோ பூஜை, மாட்டு பொங்கல் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் தமிழக முதல்- அமைச்சரின் உத்தரவுப்படி கோ பூஜை, மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டது.

சுசீந்திரம் கோவில் கோசாலையில் உள்ள 17 மாடுகளுக்கும் கொம்புகளில் வர்ணம் பூசி மாலை அணிவித்து நெத்தி பட்டம் சூட்டி. பரிவட்டம் கட்டி. வஸ்திரங்கள் சாத்தி கவுரவிக்கப்பட்டன.

தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார்

முன்னதாக கோவில் முகப்பில் கணபதி பூஜையும். லட்சுமி பூஜையும் நடந் தது. கோவில் வாசல் முன்பு 17 மாடுகளுக்கும் பொங்கல் விடும் வகையில் 17 பெண்கள் பொங்கல் பானை வைத்து கரும்பு, மஞ்சள் குலை நட்டு விளக்கேற்றி பொங்கலிட்டனர். சூடம் ஏற்றி பொங்கலிடும் நிகழ்ச்சியை தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார்.

தாடர்ந்து மேளதாளத்துடன் கோபூஜையில் வைக்கப்பட்டிருந்த புனிதநீர் கோமாதா விற்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பொங்கலிட்ட பெண்களுக்கு தளவாய்சுந்தரம் பரிசு வழங்கினார்.

பேட்டி

தொடர்ந்து தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், தமிழக முதல்- அமைச்சர் உத்தரவுப்படி சுசீந்திரம் கோவில் நிர்வாகம் சார்பில் மாட்டு பொங்கலை கோ பூஜையுடன் கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டும் தாணுமாலய சுவாமி கோவிலில் உள்ள கோமாதாக்களை கவுரவிக்கும் வகையில் கோ பூஜை நடத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் நலம் பெற வேண்டும். பசுக்களை பாதுகாக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் முதல்- அமைச்சர் கோ பூஜை நடத்த உத்தரவிட்டுள்ளார். விவசாயிகள் அனைவருக்கும் இந்த மாட்டு பொங்கலன்று வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் அன்புமணி, அறங்காவலர் குழு தலைவர் சிவகுற்றாலம், குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயளாளர் எஸ்.ஏ.அசோகன், கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார், வர்த்தக அணி செயலாளர் ஜெசீம், மாவட்ட விவசாய அணி பொருளாளர் ஆ.கோ. ஆறுமுகம். அண்ணா தொழிற்சங்க இணைச்செயலாளர் நாகசாயி, மண்டலச் செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com