பொள்ளாச்சி சந்தையில் ஒரே நாளில் ரூ 3 கோடிக்கு மாடுகள் விற்பனை

பொள்ளாச்சி சந்தையில் ஒரே நாளில் ரூ.3 கோடிக்கு மாடுகள் விற்பனை ஆனது.
பொள்ளாச்சி சந்தையில் ஒரே நாளில் ரூ 3 கோடிக்கு மாடுகள் விற்பனை
Published on

பொள்ளாச்சி

இன்று முதல் தடை எதிரொலியாக பொள்ளாச்சி சந்தையில் ஒரே நாளில் ரூ.3 கோடிக்கு மாடுகள் விற்பனை ஆனது.

மாட்டு சந்தை

பொள்ளாச்சியில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக் கிழமைகளில் மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். அதன்படி மாட்டு சந்தை நடைபெற்றது. இதையொட்டி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து சந்தைக்கு மாடுகள் கொண்டு வரப்பட்டன.

கடந்த வாரத்தை விட மாடுகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. கேரளாவில் இருந்து அதிகளவு வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கி சென்றனர். கொரோனா பரவல் காரணமாக சந்தை நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

விற்பனை அமோகம்

இதனால் வியாபாரிகள் கூட்டத்தால் சந்தை களைகட்டியது. வியாபாரிகள் போட்டி, போட்டு மாடுகளை வாங்கி சென்றனர். இது குறித்து மாட்டு வியாபாரிகள் கூறியதாவது:-

சந்தைக்கு கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தில் தஞ்சாவூர், மயிலாடுதுறை, சேலம் உள்ளிட்ட பல் வேறு பகுதிகளில் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப் பட்டன.

சந்தைக்கு 2500 மாடுகள் வந்திருந்தன. சந்தைக்கு 1000 வியாபாரிகள் வரை வந்து மாடுகளை வாங்கி சென்றனர். இதன் காரணமாக விற்பனை அமோகமாக இருந்தது.

ரூ.3 கோடிக்கு வர்த்தகம்

காங்கேயம் காளை ரூ.65 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரையும், நாட்டு பசு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரையும், எருமை ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும், மொரா ரூ.55 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையும், செர்சி ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையும் விற்பனை ஆனது.

இந்த சந்தையில் ரூ.3 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com