சுவரொட்டி ஒட்டுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை - சென்னை மாநகராட்சி

சாலைகள், தெருக்களின் விவரங்கள் குறித்த பலகையில் சுவரொட்டி ஒட்டுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை என்று சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சுவரொட்டி ஒட்டுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை - சென்னை மாநகராட்சி
Published on

சென்னை மாநகரில் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் வரையப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு, அந்த இடங்களில் தமிழ்நாட்டின் கலாசாரத்தையும், வரலாற்று சிறப்புகளையும் குறிக்கும் வகையிலான வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு மாநகராட்சி சார்பில் அழகுபடுத்தப்பட்டு வருகின்றன. இதுபோன்று பெயர் பலகைகளின் மீது சுவரொட்டி மற்றும் விளம்பரங்கள் செய்யும் நபர்கள் அல்லது நிறுவனங்களின் மீது போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டு குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்கும் வகையில் பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகளை தூக்கி எறிபவர்கள் மற்றும் வாகனங்களிலிருந்து குப்பைகளை கொட்டுபவர்களின் மீதும், கட்டுமான கழிவுகளை அங்கீகரிக்கப்படாத பொதுஇடங்களிலும், சாலைகளிலும் கொட்டுபவர்களின் மீதும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் மார்ச் 18-ந்தேதி வரை பெருநகர சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகளை மீறி பொது இடங்களில் குப்பை கொட்டிய நபர்களிடமிருந்து ரூ.12 லட்சத்து 53 ஆயிரம் அபராதமும், அங்கீகரிக்கப்படாத பொதுஇடங்களில் கட்டுமான கழிவுகளை கொட்டிய நபர்களிடமிருந்து ரூ.12 லட்சத்து 10 ஆயிரத்து 480 அபராதமும் என மொத்தம் ரூ.24 லட்சத்து 63 ஆயிரத்து 780 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com