விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும்

விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும் என்று பா.ஜ.க. மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும்
Published on

வாரியங்காவல்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்-சிதம்பரம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ஜ.க. மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் அய்யப்பன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார். கோட்ட இணை பொறுப்பாளர் சிவசாமி, மாநில விவசாய அணி துணை தலைவர் அஜய்பிரபாகர் ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில் ஜெயங்கொண்டம் அனல்மின் திட்டத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு மக்கள் நீதிமன்ற தீர்ப்பின் படி ரூ.10 லட்சத்திற்கு மேல் இழப்பீடு வழங்க டிட்கோ நிறுவனமும், தமிழக அரசும் முன்வர வேண்டும். அரியலூர், தஞ்சாவூர் மற்றும் ஜெங்கொண்டம், கும்பகோணம் மார்க்கத்தில் ரெயில்வே சேவையை உடனே தொடங்கிட வேண்டும்.

சாலைகளை சீரமைக்க வேண்டும்

திருச்சி-சிதம்பரம், விக்கிரவாண்டி-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை திட்டப்பணியை உடனே தொடங்க வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் விதிகளை மீறி சிமெண்டு ஆலைகள் அதிக ஆழம் சுரங்கம் தோண்டுவதை தவிர்க்க வேண்டும். தோண்டப்பட்ட சுரங்கங்களை சுற்றுச்சூழல் விதிகளின்படி மீண்டும் மூடியும், வெளி மாநில பணியாளர்களுக்கு பதில் அந்தந்த ஊர் பணியாளர்களை பணியில் அமர்த்த வேண்டும். குருவாடி பொன்னாற்று தலைப்பில் மட்டுமல்லாது கொள்ளிடம் ஆற்றிலும் தடுப்பணைகள் கட்ட வேண்டும்.

பொன்னேரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆழப்படுத்துவதுடன் தூய்மைப்படுத்தி நீர்பாசனத்தை முறைபடுத்த வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். மழைநீரை வீணாகாமல் ஏரிகளில் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தவும், விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் நகர பொதுச்செயலாளர் ராமர் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com