கச்சா எண்ணெய்யால் விளைநிலங்கள் பாதிப்பு: விவசாயிகளுக்கு ஓ.என்.ஜி.சி நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும்

கச்சா எண்ணெய்யால் விளைநிலங்கள் பாதிப்பு: விவசாயிகளுக்கு ஓ.என்.ஜி.சி நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்
கச்சா எண்ணெய்யால் விளைநிலங்கள் பாதிப்பு: விவசாயிகளுக்கு ஓ.என்.ஜி.சி நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும்
Published on

கொரடாச்சேரி,

திருவாருர் அருகே எருக்காட்டூர் கிராமத்தில் சில நாட்களுக்கு முன்பு ஓ.என்.ஜி.சி. குழாய் உடைந்து செல்வராஜ் என்ற விவசாயியின் பருத்தி சாகுபடி செய்யப்பட்டிருந்த வயலில் கச்சா எண்ணெய் குட்டை போல் தேங்கி நின்றது. இதனை விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஓ.என்.ஜி.சி குழாய் உடைந்து கச்சா எண்ணெய் வெளியேறியதால் விளைநிலங்களில் இனி சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 10 அடிக்கு கீழே உறுதியான குழாய் பதிப்பதாக நில உடமையாளர்களிடம் ஒப்பந்தம் செய்து நிலத்தை பெற்றுக் கொண்டு 2 அடி ஆழத்திலேயே தரமற்ற குழாய்கள் பதித்து கச்சா எண்ணெய் கொண்டு செல்கிறது. இதனால் ஆங்காங்கே குழாய் உடைந்து கச்சா எண்ணெய் வெளியேறி தீப்பிடித்து விடுவதால் விளைநிலங்கள் பாதிக்கப்படுகிறது. ஓ.என். ஜி.சி. குழாய் உடைந்து விளைநிலங்களில் கச்சா எண்ணெய் கலந்து பாதிக்கப்படுகிறது. பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாநில துணை தலைவர் ஜி.வரதராஜன், மாநில துணை செயலாளர் எம்.செந்தில்குமார் திருவாரூர் மாவட்ட செயலாளர் சேரன் செந்தில்குமார், மாவட்ட தலைவர் எம்.சுப்பையன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com