விவசாயிகள் வேதனை பயிர்களை சேதப்படுத்தும் மயில்கள் விவசாயிகள் வேதனை

காங்கேயம் பகுதியில் பயிர்களை மயில்கள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
விவசாயிகள் வேதனை பயிர்களை சேதப்படுத்தும் மயில்கள் விவசாயிகள் வேதனை
Published on

காங்கேயம்

காங்கேயம் பகுதியில் பயிர்களை மயில்கள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

மயில்கள் கூட்டம்

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்புவரை மயில்களைக் காண்பது அறிதான ஒன்றாக இருந்து வந்தது. வனங்களில் காணப்படும் மயில்கள் காணப்படும். ஒரு சில கோவில்களிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சுற்றி வரும். ஆனால் அதற்கு பின்னர் கிராமப் புறங்களில் புதராக இருக்கும் இடங்களில் மயில்களைக் காண முடிந்தது. தொடர்ந்து மயில்களின் பெருக்கம் அதிகரித்து தற்போது பலநூற்றுக்கணக்கான மயில்கள் சுற்றித் திரிகின்றன.

பல்லி, ஓணான், தவளை, சிறுபாம்புகள் உள்ளிட்டவற்றை உணவாக உண்டு வாழும் மயில்கள் தானியங்களையும் கொத்தித் தின்று வருகின்றன. தானியங்களில் மக்காச்சோளம், சோளம், கம்பு, ராகி, தட்டைப் பயறு, பாசிப்பயறு உள்ளிட்டவற்றையும் உணவாக உட்கொள்ளும். மயில்கள் பரவத் தொடங்கிய காலத்தில் கிராமங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சுற்றித் திரிந்ததால் பெரிய அளவில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் கடந்த சில வருடங்களில் மயில் கூட்டம் அபரிமிதமாக பெருகிவிட்டது. குறிப்பாக கிராமங்களில் காக்கை குருவிகளைக் காட்டிலும் மயில்கள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன.

பயிர்கள் சேதம்

புதர்களுக்குள்ளும், ஆள் நடமாட்டமில்லாத இடங்களிலும் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கின்றன. இவ்வாறு பெருகிய மயில்கள் மதிய நேரங்களில் தென்னந்தோப்புகள் மற்றும் வேம்பு உள்ளிட்ட மரங்களில் சென்று ஓய்வெடுத்துவிட்டு காலை மாலை நேரங்களில் கூட்டம் கூட்டமாக விவசாய நிலங்களுக்குள் படையெடுத்து சென்று கொத்தி சேதப்படுத்துவதுடன் பயிர்களை மிதித்தும் நாசம் செய்வதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

இதுபற்றி விவசாயிகள் தரப்பில் கூறும்போது:-

கடந்த 30 வருடங்களுக்கு முன்பு ஒரு கூட்டத்தில் 3 முதல் 4 மயில்களே செல்லும். ஆனால் தற்போது அதிக பெருக்கத்தால் ஒரு மயில் கூட்டத்தில் 10 முதல் 15 மயில்கள் செல்கின்றன. மக்காச்சோளம், சோளம், தட்டை உள்ளிட்ட பயிர்களை கொத்தி தின்பதோடு கால்களால் மிதித்தும் சேதம் செய்து விடுகிறது. தவிர சோளம், தட்டை உள்ளிட்ட விதைகளை விதைத்து அது முளைவிடும் தருணத்தில் வேரோடு பிடிங்கித் தின்றுவிடுகின்றன.

முன்பெல்லாம் மனிதர்களைக் கண்டால் ஓடிவிடும் மயில்கள் தற்போது விரட்டினால் கூட ஓடுவதில்லை. பட்டாசுகளை வெடித்தாலும் சாதாரணமாக தலையை தூக்கி பார்த்துவிட்டு பயிர்களை கொத்துவதிலேயே குறியாக இருக்கின்றன. ஏற்கனவே பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் விவசாயம் செய்து வரும் நாங்கள் தற்போது இந்த மயில் கூட்டம் பயிர்களை நாசம் செய்வதால் செய்வதறியாது தவிக்கிறோம். எனவே மயில்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த அரசுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறுஅவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com