மின்வாரிய பராமரிப்பு பணியின் போது மரங்கள் அடியோடு வெட்டி சாய்ப்பு; கிளைகளை மட்டும் அகற்ற வலியுறுத்தல்

விருதுநகரில் மின்கம்பிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக கூறி மின்வாரிய ஊழியர்கள் பராமரிப்பு பணியின்போது மரக்கிளைகளை மட்டும் அகற்றாமல் மரங்களை அடியோடு வெட்டி சாய்ப்பதை தவிர்க்க மின்வாரிய அதிகாரிகள் ஊழியர்களுக்கு அறிவுறுத்தவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.
மின்வாரிய பராமரிப்பு பணியின் போது மரங்கள் அடியோடு வெட்டி சாய்ப்பு; கிளைகளை மட்டும் அகற்ற வலியுறுத்தல்
Published on

விருதுநகர்,

விருதுநகர் மின்வாரியம் மாதாந்திர பராமரிப்பு, மழைக்கால பராமரிப்பு பணி என அவ்வப்போது மின்வினியோகத்தை நிறுத்திவிட்டு நகர் பகுதியிலும், புறநகர் பகுதியிலும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்கிறது. இந்த பராமரிப்பு பணியின் போது மின்சப்ளை செல்லும் மின்கம்பிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கட்டுமானங்கள், மரக்கிளைகள் ஆகியவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மாவட்ட நிர்வாகம் நகர், புறநகர் பகுதியில் மரக்கன்றுகளை நடுவதற்கு இயக்கம் நடத்தி மரக்கன்றுகளை நடும் பணியை ஊக்குவித்துவருகிறது. ஏற்கனவே நட்ட மரக்கன்றுகள் தற்போது மரங்களாக வளர்ந்து சுற்றுப்புறச்சூழலை பாதுகாக்கிறது. மின்வாரிய ஊழியர்கள் பராமரிப்பு பணியின்போது மின்சார கம்பிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக கூறி மரங்களை வெட்டி சாய்த்துவிடுகின்றனர். விருதுநகர் ரெயில்வே பீடர் ரோட்டில் 2 நாட்களுக்கு முன்பு பராமரிப்பு பணியின்போது மின்வாரிய ஊழியர்கள் அடுத்தடுத்து இருந்த மரங்களை அடியோடு வெட்டி சாய்த்துவிட்டனர்.

அப்போது மின்கம்பிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மரக்கிளைகளை மட்டும் வெட்டினால் போதும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியும் அதனை ஏற்காமல் மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டு உள்ளது. இந்த நிலை பல பகுதிகளில் தொடர்கிறது.

நாடுமுழுவதும் மரங்கள் வளர்க்கவேண்டிய அவசியத்தை மத்தியமாநில அரசுகள் வலியுறுத்தி வரும் நிலையில் மின்வாரிய ஊழியர்கள் தேவையில்லாமல் மரங்களை வெட்டி சாய்ப்பது என்பது ஏற்புடையது அல்ல. அவசியம் கருதி மரக்கிளைகளை மட்டும் அகற்றினால் போதும் என்ற நிலையில் மரங்களை வெட்டி சாய்ப்பதை தவிர்க்க வேண்டும் என மின்வாரிய நிர்வாகம் பராமரிப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தவேண்டியது அவசியம் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com