சத்திரப்பட்டி,
வடகாடு மலைப்பாதையில் கானிங்காடு பிரிவு அருகே தார்சாலையில் பிளவு ஏற்பட்டு சேதமடைந்து காணப்படுகிறது. இந்த சாலை வழியாக வாகனங்கள் செல்லும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்த சாலையை நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.