சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்; வாலிபருக்கு வலைவீச்சு

திருவள்ளூரில் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்; வாலிபருக்கு வலைவீச்சு
Published on

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் தாமரைப்பாக்கம் அணைக்கட்டு பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் புன்னப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வசந்த் (வயது 26) என்ற வாலிபர் அணைக்கட்டு தண்ணீரில் டிராக்டரில் பலமுறை சென்று வந்தார்.

உயிருக்கு ஆபத்தான முறையில் அவ்வாறு செல்ல வேண்டாம் என்று அங்கு பாதுகாப்பில் இருந்த வெங்கல் போலீஸ் ஏட்டு தயாளன் கூறினார். ஆனால், அதை கேட்காத வசந்த் போலீஸ் ஏட்டு தயாளனை தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது.

இதுகுறித்து தயாளன் வெங்கல் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகனுக்கு தகவல் கூறினார். இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வசந்திடம் கேட்டபோது, சப்-இன்ஸ்பெக்டரை டிராக்டரை ஏற்றி கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்து விட்டு தப்பி ஓடிவிட்டதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த வசந்தை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com