கொரோனாவில் இருந்து மக்கள் விடுபட வேண்டி மாத்திரைகள், முக கவசங்களை கொண்டு சாய்பாபாவுக்கு அலங்காரம்

கொரோனாவில் இருந்து மக்கள் விடுபட வேண்டி 3 லட்சம் மாத்திரைகள், 10 ஆயிரம் முக கவசங்களைக் கொண்டு சாய்பாபாவுக்கு சிறப்பு அலங்காரம் செய்து விசேஷ பூஜை நடத்தப்பட்டது.
கொரோனாவில் இருந்து மக்கள் விடுபட வேண்டி மாத்திரைகள், முக கவசங்களை கொண்டு சாய்பாபாவுக்கு அலங்காரம்
Published on

பெங்களூரு:

கொரோனா 3-வது அலை

கர்நாடகத்தில் கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. இந்த நிலையில் 3-வது அலை உருவாக வாய்ப்பு உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறி வருகிறார்கள். இதனால் மக்கள் ஆதங்கத்தில் இருந்து வருகிறார்கள். மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடித்து வருகிறார்கள். இருப்பினும் கொரோனா 3-வது அலை பாதிப்பு குறித்த அச்சம் மக்களிடையே இருந்து வருகிறது.

இந்த் நிலையில் பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ள சாய்பாபா கோவிலில் கொரோனாவில் இருந்து மக்கள் விடுபடவும், 3-வது அலை உருவாகாமல் இருக்கவும் வேண்டி சாய்பாபாவுக்கு 3 லட்சம் மாத்திரைகள், 10 ஆயிரம் முகக்கவசங்கள், 2 ஆயிரம் சானிடைசர் பாட்டில்கள் மற்றும் உணவு தானியங்கள், பழங்கள், இதர உணவு பொருட்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவை வேண்டி வழிபட்டனர்.

தேஜஸ்வி சூர்யா எம்.பி.

இதுகுறித்து கோவில் நிர்வாகி ஒருவர் கூறுகையில், கடந்த 4 தினங்களாக சாய்பாபாவுக்கு இந்த விசேஷ அலங்காரம் செய்யப்பட்டது. கொரோனாவில் இருந்து மக்கள் விடுபடவும், 3-வது அலை உருவாகாமல் இருக்கவும் வேண்டி இந்த சிறப்பு அலங்காரமும், பூஜையும் நடத்தப்பட்டது.

இதில் தேஜஸ்வி சூர்யா எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com