

புதுச்சேரி,
புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல் மந்திரி ரங்கசாமி, கூட்டுறவு பால் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று 7,000 ரூபாயாக இருக்கும் தற்காலிக பணியாளர்களின் ஊதியம், 15,000 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
தீபாவளியை முன்னிட்டு இலவசமாக வழங்கப்படும் வேட்டி, சேலைக்கு பதிலாக குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக்கணக்கில் 500 ரூபாய் செலுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். மேலும் அரசு மற்றும் காவல்துறையில் காலியாக உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.