மு.க.ஸ்டாலினை முதல்வராக்க ப.சிதம்பரம் ஆதரவு பெற்ற மாங்குடியை வெற்றி பெறச்செய்யுங்கள்; திருநாவுக்கரசு எம்.பி. பிரச்சாரம்

காரைக்குடி சட்டமன்ற தொகுதியின் திமுக காங்கிரஸ் கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசு எம்.பி காரைக்குடியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.
மு.க.ஸ்டாலினை முதல்வராக்க ப.சிதம்பரம் ஆதரவு பெற்ற மாங்குடியை வெற்றி பெறச்செய்யுங்கள்; திருநாவுக்கரசு எம்.பி. பிரச்சாரம்
Published on

அப்போது அவர் பேசியதாவது,

மாங்குடி, பொருளாதார மேதை ப.சிதம்பரம் ஆதரவு பெற்ற வேட்பாளர் தொகுதி மக்களின் அன்பைப் பெற்றவர். ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது மோடியா லேடியா என பிரச்சாரம் செய்து பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றார்.திமுக காங்கிரஸ் வெற்றி கூட்டணி. மற்ற கூட்டணிகள் வாக்கு வங்கிகள் இல்லாத பேரங்கள் பேசப்பட்டு உருவான கூட்டணி. மு க ஸ்டாலின்

முதல்வராக தகுதியானவர். அண்ணா, கலைஞர் வகித்த பதவிகளில் இருந்தவர்.சென்னை நகர மேயராக ,சட்டமன்ற உறுப்பினராக துணை முதல்வராக பணியாற்றியவர். அவர் பணியாற்றிய காலங்களில் எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகாதவர்.மாங்குடியை வெற்றிபெறச் செய்யுங்கள். மாங்குடி வெற்றி பெற்றால் மு. க . ஸ்டாலின் முதல்வராவார். ஸ்டாலின் முதல்வரானால் தமிழகம் சிறப்படையும் இவ்வாறு பேசினார்.

வேட்பாளர் மாங்குடி பேசும்போது,

நான் வெற்றிபெற வாய்ப்பு அளித்தால் இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பேன்.ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை நாட்களை அதிகரிப்பதோடு தினக்கூலியை ரூ.300 ஆக உயர்த்த குரல் கொடுப்பேன். தடையின்றி இலவச மும்முனை மின்சாரம் வழங்கி விவசாயிகளின் நலனுக்காக பாடுபடுவேன். கணவனை இழந்து கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் இணைந்து நடத்தும் ஆடு கோழி வளர்ப்பு பண்ணைக்கு 30 சதவீத மானியம் தர பாடுபடுவேன் நெல் கொள் முதல் நிலையங்களில் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்துவேன். சிறப்பு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நீர்நிலைகள் பாதுகாக்கப்படும். நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் தரப்படும், நெசவாளர்கள் பாதுகாப்பு திட்ட உதவித்தொகை காரைக்குடி நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் உயர்த்தப்படும் அதன் மூலம் மென்மேலும் காரைக்குடி நகரம் வளர்ச்சி அடைய வழிவகை செய்யப்படும். காரைக்குடி. தேவகோட்டை. தேவகோட்டை ஒன்றியம் கண்ணங்குடி ஒன்றியம் சாக்கோட்டை ஒன்றியம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு வழி வகை செய்வேன்.

இவ்வாறு பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com