டாஸ்மாக் கடைகளுக்கு லாரிகளில் மதுபானம் அனுப்பிவைப்பு

ராமநாதபுரத்தில் இருந்து டாஸ்மாக் கடைகளுக்கு லாரிகளில் மதுபானம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.
டாஸ்மாக் கடைகளுக்கு லாரிகளில் மதுபானம் அனுப்பிவைப்பு
Published on

ராமநாதபுரம்,

நாளை (7-ந்தேதி) முதல் தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் மதுக்கடைகளை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. இதுகுறித்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சவுந்தர் கூறியதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 121 கடைகளும், 82 பார்களும் உள்ளன. இவற்றில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மீதம் உள்ள சாதாரண பகுதிகளில் அமைந்துள்ள மதுக்கடைகள் நாளை (7-ந் தேதி) முதல் திறக்கப்படும்.

மதுக்கடைகளில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்படும். ஒரு நபருக்கும் மற்றொரு நபருக்கும் இடையில் 6 அடி தூர சமூக இடைவெளி கடைபிடித்து நின்று மதுபானங்கள் வழங்குவது உறுதிசெய்யப்படும். இதற்காக மதுக்கடைகளின் முன்பு சவுக்கு மரக்கட்டைகள் மூலம் வேலி அமைத்து வரிசையாக வர ஏற்பாடு செய்யப்படுகிறது. மேலும் காவல்துறை மூலம் மதுக்கடைகளில் கூட்டத்தினை ஒழங்குபடுத்தி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துதர நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே ராமநாதபுரத்தில் உள்ள மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தில் இருந்து டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானங்களை லாரியில் ஏற்றி அனுப்பி வைக்கும் பணி நேற்று நடந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com