ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும் நல்லசாமி பேட்டி

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் டெல்டா மாவட்டங்கள் பாலை வனமாகும் என்று, மயிலாடுதுறையில் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும் நல்லசாமி பேட்டி
Published on

மயிலாடுதுறை,

உலகின் பல்வேறு நாடுகளில் நிலத்தடி நீரை எடுக்க தடை உள்ளது. ஆனால் தமிழகத்தில் தேவைக்கு அதிகமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது. ஏரிகள், குளங்களை தூர்த்து அரசே பல்வேறு இடங்களில் கட்டிடங்களை கட்டி உள்ளது. தென்ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரம் போன்று தண்ணீர் இல்லாத நிலை, சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு விரைவில் ஏற்படும். முறையான திட்டமிடல் இல்லாததே குடிநீர் பிரச்சினைக்கு காரணம். நீர்நிலைகளை பாதுகாக்க தவறியதால் தான் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

நிலத்தடி நீரை தொடர்ந்து எடுத்து வருவதால் டெல்டா மாவட்டங்களில் உள்ள 8 ஒன்றியங்களில் நிலத்தடி நீர் முற்றிலும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இது ஹைட்ரோ கார்பன் எடுப்பதை விட மோசமான விளைவை ஏற்படுத்தும்.

தற்போது 1,000 அடிக்கு கீழே நிலத்தடி நீர் சென்றுவிட்டது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும். கிராமப்புற ஊராட்சிகளுக்கு அதிக அதிகாரம் வழங்கினால் மட்டுமே மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும். இதற்காக சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் தவிர்த்து அனைத்து தேர்தல்களிலும், அரசியல் கட்சிகள் போட்டியிடாமல், சுயேச்சைகள் போட்டியிட சட்டம் இயற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com