வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி - மாவட்டம் முழுவதும் பா.ம.க.வினர் போராட்டம்

வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி நாமக்கல் மாவட்டம் முழுவதும் பா.ம.க.வினர் போராட்டம் நடத்தினர்.
வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி - மாவட்டம் முழுவதும் பா.ம.க.வினர் போராட்டம்
Published on

நாமக்கல்,

வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழகம் முழுவதும் பா.ம.க.வினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று நகராட்சி அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்திய பா.ம.க.வினர் ஆணையாளரிடம் மனு கொடுத்தனர். நாமக்கல் நகராட்சி அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு துணை பொதுச்செயலாளர் தினேஷ் பாண்டியன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் சதீஷ் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் பெருமாள், துணை செயலாளர்கள் சரவணன், வையாபுரி, வேலுச்சாமி, துணை தலைவர் நடராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில துணை தலைவர் வடிவேலன், முன்னாள் துணை பொதுச்செயலாளர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், மாநில இளைஞர் சங்க துணை செயலாளர் பாலு, மாநில மாணவர் சங்க துணை செயலாளர் மனோஜ், நாமகிரிப்பேட்டை ஒன்றியகுழு துணை தலைவர் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் நகராட்சி ஆணையாளர் பொன்னம்பலத்திடம் மனு கொடுத்தனர்.

குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி சார்பிலும், வன்னியர் சங்கம் சார்பிலும் கல்வி - வேலைவாய்ப்பு ஆகியவற்றில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்ககோரி குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் பொன்.ரமேஷ், மாநில துணை அமைப்பு செயலாளர் சுதாகர், மாநில இளைஞர் சங்க துணைச் செயலாளர் தனபால், மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் சுதா நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இட ஒதுக்கீடு வழங்ககோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. அதன்பின் குமாரபாளையம் நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லி பாபுவிடம் கோரிக்கையை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் செ.மூர்த்தி மாவட்ட துணைத் தலைவர் மா.ராஜா, நகர செயலாளர்கள் சு.சோமசுந்தரம், குமார், நகர தலைவர் கார்த்தி, ஒன்றிய செயலாளர் விஜயகுமார், ஒன்றிய தலைவர் கண்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பெருமாள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வேல்முருகன், வடிவேல், மாவட்ட சட்டபாதுகாப்பு தலைவர் கோவிந்தன் உள்பட நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.

வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க கோரி நாமக்கல் மேற்கு மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் மற்றும் நகராட்சி ஆணையாளரிடம் மனு வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாநில செயற்குழு உறுப்பினர் கணேசன் தலைமையில் நடந்தது. நகர செயலாளர் ராஜா, தலைவர் ராஜபாண்டியன், ஒன்றிய செயலாளர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைவர் ஜெயமுருகன் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பா.ம.க. மகளிர் அணியினர், வன்னியர் சங்கத்தினர் 200-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று கோஷம் எழுப்பி மனு அளித்தனர்

நிகழ்ச்சியில் நெசவாளர் அணி சேட்டு, மாநில இளைஞர் அணி உமாசங்கர், ராஜேந் திரன், தெற்கு நகர தலைவர் சேகர். மாவட்ட துணை செயலாளர் குமார், தொழிற்சங்க ராதாகிருஷ்ணன், முருகன், மாவட்ட மகளிர் நிர்வாகிகள் மகேஸ்வரி, செல்வி, மேற்கு ஒன்றிய குழந்தைவேல், பம்பாய் முருகன், மெக்கானிக் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதேபோல வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி நாமக்கல் மாவட்டம் முழுவதும் பா.ம.க.வினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com