ராஜவாய்க்காலில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற கோரிக்கை

ராஜவாய்க்காலில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜவாய்க்காலில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற கோரிக்கை
Published on

கரூர்,

கரூரில் இருந்து வாங்கல் செல்லும் சாலையில் பஞ்சமாதேவி பிரிவு சாலை அருகே ராஜவாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் ஆண்டாங்கோவிலில் இருந்து கோயம்பள்ளி, சோமூர் வரை செல்கிறது. இந்த வாய்க்கால் தண்ணீர் மூலம் அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்நிலையில் பஞ்சமாதேவி பிரிவு சாலையில் செல்லும் ராஜவாய்க்காலில் குப்பை கழிவுகள் அதிகளவில் தேங்கி கிடக்கின்றன. குறிப்பாக பிளாஸ்டிக் பாட்டில்கள், பழைய துணிகள், பழைய செருப்புகள், பிளாஸ்டிக் பைகள், சாக்குகள் உள்ளிட்டவை மிதக்கின்றன.

இதனால், விவசாய பணிகளுக்கு தண்ணீர் செல்ல தடை ஏற்படுகிறது.

அகற்ற கோரிக்கை

மேலும், ஏற்கனவே வாய்க்காலில் அகற்றப்பட்ட குப்பை கழிவுகள் வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்படாமல், வாய்க்காலின் ஓரத்திலேயே மலைபோல குவிந்து கிடக்கிறது.

இந்த குப்பை கழிவுகள் சரிந்து மீண்டும் வாய்க்காலில் விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

ஆகவே, ராஜவாய்க்காலில் தேங்கி கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com