மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட காரணமானவர்கள் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்

மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட காரணமானவர்கள் மீது நடவடிக்கை கோரி ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட காரணமானவர்கள் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை ரெயில் நிலையம் முன்பு நேற்று நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தில்லைவனம் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சந்திர குமார் தொடங்கி வைத்தார்.

ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை சாந்தப்பிள்ளைகேட் பகுதியில் தரமில்லாத கட்டுமான பணியினால் சாந்தப்பிள்ளை கேட் மேம்பாலம் திறப்பதற்கு முன்பாக விரிசல் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. இதனை ஆய்வு செய்து மக்கள் பயன்பாட்டிற்கு பாதுகாப்பானது என்பதை உறுதி செய்ய வேண்டும். மேம்பாலத்தை அருளானந்தநகர் பிரிவு வரை விரிவு படுத்த வேண்டும்.

பழைய வரைவுத்திட்டத்தின்படி ரெயில் நிலையத்தில் இருந்து நாஞ்சிக்கோட்டை, சாந்தப்பிள்ளைகேட், பூக்காரத்தெருவிற்கு செல்ல ஏதுவாக பறக்கும் பாலம் ஆக மாற்றி கட்ட வேண்டும். மக்கள் வரிப்பணத்தை பொறுப்பற்ற முறையில் விரிசல் ஏற்படும் வகையில் மேம்பாலம் கட்ட செயல் படுத்திய ஒப்பந்தக்காரர், அரசு அதிகாரிகள், அதற்கு துணைபோனவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் சேவையா, துணை செயலாளர் துரை.மதிவாணன், பொருளாளர் கோவிந்தராஜன், வங்கி ஊழியர் சங்க நிர்வாகி கோவிந்தன், அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், தெருவியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் முத்துக்குமரன், போக்குவரத்து மத்திய சங்க பொருளாளர் சுந்தரபாண்டியன், மாவட்ட பொருளாளர் தியாகராஜன், கட்டுமான சங்க மாவட்ட துணைத்தலைவர் செல்வராஜ், போக்குவரத்து ஓய்வூதியர் சங்க செயலாளர் அப்பாத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com