கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி அதிகாரிகள் வேலைநிறுத்தம் பண பரிவர்த்தனை பாதிப்பு

கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் வங்கி அதிகாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக பண பரிவர்த்தனை கடுமையாக பாதிக்கப்பட்டது.
கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி அதிகாரிகள் வேலைநிறுத்தம் பண பரிவர்த்தனை பாதிப்பு
Published on

புதுச்சேரி,

பொதுத்துறை வங்கிகளை இணைக்கக்கூடாது, பிராந்திய கிராம வங்கிகளை இணைக்கும் முயற்சியை கைவிட வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக சுய்ப்ரேன் வீதியில் உள்ள ஸ்டேட் வங்கி முன்பு வங்கி அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் புதுவையில் உள்ள 140 வங்கிக்கிளைகளில் பணிபுரியும் 400-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். வேலை நிறுத்தம் காரணமாக நேற்று வங்கிகளில் ரூ.200 கோடி அளவுக்கு பணபரிவர்த்தனை முழுமையாக பாதிக்கப்பட்டது.

அதிகாரிகள் சங்கங்களை தவிர்த்து மற்ற ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர். அவர்கள் வங்கிகளில் மேற்கொள்ளப்படும் பிற பணிகளை மேற்கொண்டனர். பண பரிவர்த்தனைகள் நடைபெறாததால் வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com