காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்கக்கோரி தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை ரெயிலடியில் அனைத்து இயக்கங்கள் சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு தமிழர் தேசிய இயக்க பொதுச் செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். இதில் தாளாண்மை உழவர் இயக்க நிறுவன தலைவர் திருநாவுக்கரசு கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் மற்றும் போராட்டக்குழுவினர் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும். காவிரி டெல்டாவில் விவசாயத்தை பாழாக்கும், மக்களை அகதிகளாக்கும் மீத்தேன், ஷேல் எரிவாயு, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களை நிறுத்த வேண்டும்.

பெட்ரோல், டீசல் எடுக்கிறோம் என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மறைமுகமாக ஓ.என்.ஜி.சி. மூலம் மீத்தேன் எரிவாயு எடுப்பதை கைவிட வேண்டும். காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இதில் இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் சிமியோன் சேவியர்ராஜ், காவிரி சமவெளி பாதுகாப்பு கூட்டமைப்பு நிர்வாகி ஜெயசங்கர், தமிழ் தேசிய பேரியக்கத்தை சேர்ந்த ராஜேந்திரன், சமவெளி விவசாயிகள் சங்க தலைவர் பழனிராஜன், தமிழ்நாடு இளைஞர் இயக்க ஒருங்கிணைப்பாளர் அருண்சோரி, மீத்தேன் எதிர்ப்பு போராட்டக்குழு நிர்வாகிகள் மணிவண்ணன், வெங்கடேசன், இளங்கோவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சேவையா நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com