பாசன வாய்க்கால்களை தூர்வாரும் பணியை விவசாயிகளிடம் ஒப்படைக்க கோரி ஆர்ப்பாட்டம்

பாசன வாய்க்கால்களை தூர்வாரும் பணியை விவசாயிகளிடம் ஒப்படைக்க கோரி காவிரி பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் பாபநாசத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாசன வாய்க்கால்களை தூர்வாரும் பணியை விவசாயிகளிடம் ஒப்படைக்க கோரி ஆர்ப்பாட்டம்
Published on

பாபநாசம்,

பாபநாசம் அண்ணாசிலை அருகில் காவிரி பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில தலைவர் கண்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில செயலாளர் வக்கீல் ஏ.எம்.ராஜா முன்னிலை வகித்தார். கூட்டுறவு வங்கியில் புதிய உறுப்பினர்களை சேர்த்து நடப்பு ஆண்டில் சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் கடன் உடனே வழங்கவேண்டும் அனைத்து பாசன வாய்க்கால்களை மற்றும் கிளை வாய்க்கால்களையும் தூர்வாரும் பணியை விவசாயிகளிடம் ஒப்படைத்து அதற்கான தொகையை வழங்கவேண்டும்.

ஆறு, பாசனவாய்க்கால், குளம் ஆகியவற்றில் ஆக்கிரமிப்புகளை உடனே அகற்றி நீர்நிலைகளை பாதுகாக்கவேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் துணைத்தலைவர் காளிதாஸ், பொருளாளர் தேவேந்திரன், மாவட்ட தலைவர் பாலு, மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி, நகர செயலாளர் தியாகராஜன், நகர தலைவர் சுந்தரி, ஒன்றிய செயலாளர் இளங்கோவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com