காலி பணியிடங்களை நிரப்பக்கோரி சுகாதார ஊழியர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி அரசு சுகாதார ஊழியர்கள் சங்கங்களின் சம்மேளனம் சார்பில் அனைத்து மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமுதாய நலவழி மையங்களில் பணிகளை புறக்கணித்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காலி பணியிடங்களை நிரப்பக்கோரி சுகாதார ஊழியர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி அரசு சுகாதார ஊழியர்கள் சங்கங்களின் சம்மேளனம் சார்பில் அனைத்து மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமுதாய நலவழி மையங்களில் பணிகளை புறக்கணித்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 8 மாத ஊதியத்தை வழங்க வேண்டும், நோயாளிகள் பராமரிப்பு படி, செவிலியர் படி, சீருடை படி உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். அமைச்சரவை தீர்மானத்தின்படி சுகாதாரத்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தேசிய நகர்புற சுகாதார இயக்கக ஊழியர்களுக்கு 33 சதவீதம் பணிநிரந்தரம் வழங்க வேண்டும். ஏற்கனவே அறிவித்தது போல் ரூ.10 ஆயிரம் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதனால் சுமார் 1 மணி நேரம் பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால் நோயாளிகள் அவதி அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com