உள்ளாட்சித் துறை பணியாளர்களுக்கு கொரோனா சிறப்பு ஊதியம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

உள்ளாட்சித் துறை பணியாளர்களுக்கு கொரோனா சிறப்பு ஊதியம் உடனே வழங்க கோரி அரியலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உள்ளாட்சித் துறை பணியாளர்களுக்கு கொரோனா சிறப்பு ஊதியம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
Published on

தாமரைக்குளம்,

அரியலூர் அண்ணா சிலை அருகே ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் தண்டபாணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் தன்சிங், ஒன்றிய பம்பு ஆபரேட்டர் பிச்சை பிள்ளை, நகராட்சி ஊழியர் சிவஞானம், சிலம்புச் செல்வி, ராஜலட்சுமி, பாப்பாத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் திருமானூர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கொரோனாவால் உயிரிழக்கும் தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், ஒருவருக்கு வேலை வாய்ப்பு அளிக்கவேண்டும். கிராம தூய்மை காவலர்களுக்கு சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக முதல்-அமைச்சர் அறிவித்த ரூ.1000 ஊதிய உயர்வை நிலுவை தொகையுடன் உடனே வழங்கிட வேண்டும். உள்ளாட்சித் துறை பணியாளர்களுக்கு கொரோனா சிறப்பு ஊதியம் உடனே வழங்க வேண்டும்.

வருங்கால வைப்பு நிதி

வருங்கால வைப்பு நிதி குறித்த தகவல்கள் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை. வைப்பு நிதிக்கு பிடிக்கப்படும் பணம் எங்கே செல்கிறது என்றும் தெரியவில்லை. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com