அறந்தாங்கி அருகே நிழற்குடை அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

அறந்தாங்கி-புதுக்கோட்டை சாலையில் உள்ள எரிச்சியில் பயணிகள் நிழற்குடை அமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அறந்தாங்கி அருகே நிழற்குடை அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
Published on

அறந்தாங்கி,

அறந்தாங்கி-புதுக்கோட்டை சாலையில் உள்ள எரிச்சியில் பயணிகள் நிழற்குடை அமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் தென்றல் கருப்பையா தலைமை வகித்தார். இதில், ஆலங்குடி சட்டமன்ற தொகுதி நிதியில் இருந்து எரிச்சிக்கு பயணிகள் நிழற்குடை அமைக்க 10 மாதங்களுக்கு முன்பு ரூ.5 லட்சத்து 30 ஆயிரம் நிதி ஒதுக்கியும், இன்னும் நிழற்குடை அமைக்காமல் உள்ளதற்கு கண்டனம் தெரிவித்தும், உடனே நிழற்குடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். இதில், கட்சியின் மாவட்ட செயலாளர் கவிவர்மன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com