கொசு ஒழிப்பு பணிகளை துணை மேயர் ஆய்வு

மாம்பலம் கால்வாய் பகுதி கொசு ஒழிப்பு பணிகளை துணை மேயர் ஆய்வு செய்தார்.
கொசு ஒழிப்பு பணிகளை துணை மேயர் ஆய்வு
Published on

சென்னை அடையாறு மண்டலத்துக்கு உட்பட்ட அப்பாவு நகரில் உள்ள மாம்பலம் கால்வாய் பகுதிகளில் மலேரியா பணியாளர்கள் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை பெருநகர சென்னை மாநகராட்சியின் துணை மேயர் மகேஷ்குமார் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, கால்வாயில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் போன்ற கழிவுகளை அவ்வப்போது அகற்றவும், கொசுப்புழுக்கள் உருவாகுவதை ஆரம்ப நிலையிலேயே அழிக்கும் விதத்தில் நீர்நிலைகளில் தேவையான அளவுக்கு கொசு கொல்லி மருந்துகளை தெளிக்கவும் அறிவுறுத்தினார். மேலும், மாம்பலம் கால்வாயிலும் டிரோன் பயன்படுத்தி கொசுக்கொல்லி மருந்துகளை தெளிக்கவும் அவர் அறிவுறுத்தினார்.

பின்னர் துணை மேயர் மகேஷ்குமார் கூறும்போது, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உடனடியாக தங்கள் பகுதிகளில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து அதை களைவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். அதனடிப்படையில், வார்டு 169-க்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்து, பணியை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டது. பருவமழை காலங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க வெள்ள மேலாண்மை குழுவின் பரிந்துரைகளை முனைப்புடன் நிறைவேற்றுவதில் அதிக கவனம் செலுத்தப்படும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com