காங்கிரசுடன் கூட்டணி அமைத்ததற்காக சிவசேனா மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கும் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகிறார்

காங்கிரசுடன் கூட்டணி அமைத்ததற்காக சிவசேனா மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கும் என சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
காங்கிரசுடன் கூட்டணி அமைத்ததற்காக சிவசேனா மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கும் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகிறார்
Published on

மும்பை,

பீகா மாநில தேர்தல் முடிவு குறித்து அங்கு பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளராக பணியாற்றிய மராட்டிய சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-

காங்கிரஸ் தலைமையால் மக்கள் மத்தியில் நம்பிக்கையை விதைக்க முடியவில்லை. அதுதான் அந்த கட்சி தற்போது உள்ள நிலைக்கு முக்கிய காரணமாக உள்ளது. எங்களின் முக்கிய துருப்பு சீட்டான பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பிரசார பேச்சு பீகாரில் உள்ள கிராமங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

சிவசேனாவுக்கு பின்னடைவு

பீகார் 89 சதவீதம் ஊரக பகுதிகளை கொண்டு உள்ளது. எனவே மக்களை சென்றடைவது மிகவும் கடினமான பணியாகும். ஆட்சியை பிடிப்பதற்காக காங்கிரசுடன் கூட்டணி அமைத்ததற்காக அதிகம் பாதிக்கப்படும் கட்சியாக சிவசேனா இருக்கப்போகிறது.

தற்போது அதை சிவசேனாவால் புரிந்து கொள்ள முடியாது. அடுத்த நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல் அவர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com