சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் நிகழ்ச்சிகளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை: இணை ஆணையர்

பழனி முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா நாளை தொடங்குகிறது.
சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் நிகழ்ச்சிகளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை: இணை ஆணையர்
Published on

பழனி,

பழனி முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா நாளை தொடங்குகிறது. இதன் முக்கிய நிகழ்ச்சிகளான சூரசம் ஹாரம், திருக்கல்யாணம் ஆகியவற்றில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என்று கோவில் இணை ஆணையர் கிராந்தி குமார்படி தெரிவித்தார்.

முருகப்பெருமானின் அறு படை வீடுகளில் 3-ம் படை வீடான பழனியில் கந்த சஷ்டி திருவிழா நாளை (ஞாயிற்றுக் கிழமை) தொடங்கி வருகிற 21-ந்தேதி வரை நடக் கிறது. இது தொடர்பாக பழனி கோவில் இணை ஆணையர் கிராந்தி குமார்படி நிருபர் களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:-

திண்டுக்கல் கலெக்டர் அலு வலகத்தில் கலெக்டர் விஜய லட்சுமி தலைமையில் கந்த சஷ்டி திருவிழா முன்னேற் பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, சப்-கலெக்டர் அசோக ன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண் டனர்.

அதையடுத்து கலெக்டர் சில உத்தரவுகளை பிறப்பித் தார். அதாவது, கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஆனாலும் கோவில்களில் திருவிழாக் களை நடத்த சில வழிமுறைகள் அரசால் கொடுக்கப் பட்டுள்ளது. அதனை பின் பற்றி திருவிழாக்களை நடத்த லாம். பழனி முருகன் கோவிலில் நாளை மறுநாள் (அதாவது நாளை) முதல் வருகிற 21-ந்தேதி வரை கந்த சஷ்டி திருவிழா கொண்டாடப் படுகிறது. இதில் 6-ம் நாள் (20-ந்தேதி) நிகழ்ச்சி யான சூரசம்ஹாரமும், 7-ம் நாள் (21-ந்தேதி) நிகழ்ச்சியான திருக்கல்யாணமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இதனை காண்பதற்காக பக்தர்கள், மண்டகப்படி தாரர்கள் என லட்சக்கணக் கானோர் பழனிக்கு வருகை தருவார்கள். இதனால் கொரோனா தொற்று வேக மாக பரவும் அபாயம் உள்ளதால் இந்த நிகழ்ச்சிகளில் பக்தர்கள், மண்டகப்படி தாரர்கள் பங்கேற்க அனுமதி இல்லை. ஆனாலும் சூரசம் ஹாரம், திருக்கல்யாண நிகழ்ச் சிகளை பக்தர்கள் உள்ளூர் தொலைக்காட்சி, யூடியூப் ஆகியவை மூலம் நேரடியாக கண்டுகளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

சூரசம்ஹாரம், திருக் கல்யாணம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கும் நாட்களை தவிர மற்ற நாட்களில் காலை 8 மணி முதல் பழனி முருகன் கோவில், திருஆவினன்குடி கோவில், பெரியநாயகி அம்மன் கோவில் ஆகியவற்றில் பக்தர் கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். மேலும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கும் தினத்தில் கிரிவீதியில் பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை. அங்குள்ள வியாபார கடைகளும் அடைக்கப் படும்.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது சப்-கலெக்டர் அசோகன், கோவில் துணை ஆணையர் செந்தில்குமார் ஆ கியோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com