நொய்யல் ஆற்றில் நுரையுடன் சென்ற சாயக்கழிவுநீர் - நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

திருப்பூர் பெத்திசெட்டிபுரத்தில் நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுநீர் நுரையுடன் தண்ணீரில் கலந்து சென்றது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நொய்யல் ஆற்றில் நுரையுடன் சென்ற சாயக்கழிவுநீர் - நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
Published on

திருப்பூர்,

திருப்பூரில் ஏராளமான பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களை போலவே சாய, சலவை ஆலைகள் மற்றும் பிரிண்டிங் நிறுவனங்களும் அதிகமாக செயல்பட்டு வருகின்றன. இந்த சாய, சலவை ஆலைகள் மற்றும் பிரிண்டிங் நிறுவனங்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்றுத்தான் இயங்க வேண்டும்.

ஆனால் அனுமதி பெறாமலும், முறைகேடாகவும் இயங்கி வரும் சாய, சலவை ஆலைகள் சாயக்கழிவுநீர் மற்றும் பிரிண்டிங் கழிவுநீரை நிலத்திலும், நீர்நிலைகளிலும் திறந்து விட்டு விடுகின்றன. இதனால் நீர்வளம் மற்றும் நிலவளம் பாதிக்கப்படுகிறது. அந்த தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.

இதுதொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர். இருப்பினும் இந்த சம்பவம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. திருப்பூர் பெத்தி செட்டிபுரத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நொய்யல் ஆற்றில் நுரையுடன் சாயக்கழிவுநீர் கலந்து சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் நேற்றும் அந்த பகுதியில் நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுநீர் கலந்து நுரையுடன் தண்ணீர் பாய்ந்து சென்றது.

இதனை பார்த்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். நீர்நிலைகள் மற்றும் நிலங்களில் சாயக்கழிவுநீர் மற்றும் பிரிண்டிங் கழிவுநீரை திறந்து விடும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com