தனுஷின் தந்தை என வழக்கு தொடர்ந்தவர் ரஜினிக்கு வேண்டுகோள் “என்னைப்பார்க்க என் மகனை அனுப்பி வையுங்கள்”

Published on

மதுரை,

நடிகர் தனுசுக்கு தந்தை எனக்கூறி, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த மேலூரை சேர்ந்த கதிரேசன், மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக பகுதியில் துண்டுப்பிரசுரம் ஒன்றை நேற்று வினியோகித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

பாசமிகு உறவினர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அன்பான வேண்டுகோள். தங்களுடைய விருப்பமாம் நமக்கு முக்கியம் நம்முடைய தாய்-தந்தைதான். அவர்கள் வாழும் தெய்வங்கள். நம் குடும்பம் தான் முக்கியம் எனக்கூறியதங்களை மனமார வாழ்த்துகிறேன். நம் குடும்ப உறவுகள் மேம்பட நான் பெற்று வளர்த்த என் மகனும் தங்கள் மருமகனுமாகிய கலைச்செல்வன் என்கிற தனுஷை, அவன் பெற்றோராகிய என்னையும் என் மனைவி மீனாட்சியையும் வந்து ஒருமுறை பார்த்துச்செல்ல அனுப்பும்படி அன்புடன் வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com